உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சண்முகா நதி அணை நீர்திறப்பு

சண்முகா நதி அணை நீர்திறப்பு

சென்னை: தேனி மாவட்டம், சண்முகா நதி அணையில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது. இதுகுறித்து, நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டம், சண்முகா நதி நீர்தேக்க திட்டத்தின் கீழ், உத்தமபாளையம் வட்டத்தை சேர்ந்த புஞ்சை நிலங் களுக்கு பயன்படும் வகையில், இன்று முதல் நீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 14.4 கனஅடி வீதம், 62.6 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள, 1,640 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை