உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவிகளுக்கு சித்த மருத்துவ முகாம்

பள்ளி மாணவிகளுக்கு சித்த மருத்துவ முகாம்

கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சித்த மருத்துவ நலத்திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சித்தா டாக்டர் சிராஜூதீன், பள்ளிக் குழந்தைகளுக்காக துவக்கப்பட்ட இளந்தளிர் திட்டம் குறித்தும், கற்றல் குறைபாடு, ரத்த சோகை, பூப்பு பிரச்னை குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார். இதற்கு தீர்வு ஏற்படும் வகையில் உள்ள வல்லாரை மாத்திரை, அன்னபேதி மாத்திரை, கற்றாழை லேகியம், நெல்லிக்காய் லேகியம், பெரோசித் சிரப் ஆகிய மருந்துகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் முனியசாமி, தலைமை செவிலியர் மல்லிகா, சுகாதார செவிலியர்கள் ராமுத்தாய், காஞ்சனா, கிராம சுகாதார செவிலியர்கள், ரத்தப் பரிசோதனை நிபுணர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை