உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / களஞ்சியம் வெள்ளி விழா பொதுக்குழு கூட்டம்

களஞ்சியம் வெள்ளி விழா பொதுக்குழு கூட்டம்

சின்னமனூர்: சின்னமனூர் வட்டார களஞ்சியத்தின் வெள்ளி விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக விழிப்புணர்வு ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் பாலாண்டி துவக்கி வைத்தார். இதில் சின்னமனூர் வட்டாரத்தில் உள்ள களஞ்சிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். நடன நிகழ்ச்சிகளான பரதம் மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வேளாண் துணை இயக்குநர் சுரேஷ், வங்கி மேலாளர்கள் மோகன் , அமல் முரளி, நிதினஸ் பேசினர். மண்டல ஒருங்கிணைப்பாளர் வித்யா களஞ்சியம் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். மண்டல கணக்காளர் விக்னேஷ் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். வட்டார தலைவி லட்சுமி, ஒருங்கிணைப்பாளர் ஷோரி கிஷ் பேசினார்கள். ஏற்பாடுகளை மகேஸ்வரி சித்ரா, சசிகலா உள்ளிட்டோர் செய்திருந்தனர். வட்டார தலைவி லட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை