சமூக நல விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி: அன்னை டோரா நர்சிங் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவிகள் தெப்பம்பட்டியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்வில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழித்தல், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு கல்லுாரி பேராசிரியர் லட்சுமணன் தலைமை வகித்தார். முதல்வர் சுதாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சக்திவேல் பாண்டியன், கிராமத்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.