உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காதலிக்காக தாயை தவிக்கவிட்ட மகன்

காதலிக்காக தாயை தவிக்கவிட்ட மகன்

தேவதானப்பட்டி: காதலிக்காக தாய் விஜயலட்சுமியை தவிக்க விட்டு சென்ற மகன் சந்தனக்குமாரை போலீசார் தேடுகின்றனர். பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி விஜயலட்சுமி 55.இவர்களுக்கு சந்தனக்குமார் 29, சரிதா 25. இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணமாகி 4 ஆண்டுகளிலேயே சுந்தரமூர்த்தி இறந்தார். விஜயலட்சுமி மதுரையில் உள்ள தனது அக்கா ஆதிலட்சுமி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து, பிள்ளைகளை படிக்க வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சரிதாவிற்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊரான மேல்மங்கலத்திற்கு விஜயலட்சுமி, சந்தனக்குமார் குடி வந்தனர். தேனியில் தனியார் மில்லில் சந்தனக்குமார் வேலைக்கு சென்றார். சந்தனக்குமார், தனது தங்கையின் அலைபேசி வாட்ஸ் ஆப்பில், 'தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் உடனே திருமணம் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறார். எனவே நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்னை தேடவேண்டாம்,' என தகவல் அனுப்பி இருந்தார். மகனை காணவில்லை என விஜயலட்சுமி புகாரில், ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ