உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெயில் தாக்கத்தால் குறையும் சோத்துப்பாறை அணை நீர்மட்டம்

வெயில் தாக்கத்தால் குறையும் சோத்துப்பாறை அணை நீர்மட்டம்

பெரியகுளம் : வெயில் தாக்கம் அதிகரிப்பால் சோத்துப்பாறை அணை தினமும் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது.பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை அணை பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரம் 126. 28 அடி. அணை நீரினால் பழைய, புதிய ஆயக்கட்டில் உள்ள 2865 ஏக்கர் பாசன வசதி பெறும். சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் இம்மாதம் துவக்கம் முதல் வெயில் தாக்கம் அதிகரித்தது. ஜூன் 1ல் அணையின் நீர்மட்டம் 92.49 அடியாகவும், ஜூன் 16ல் 86.59 அணியாகவும், ஜூன் 17ல் 85.25 அடியாகவும், ஜூன் 18ல் 84.46 அடி. ஜூன் 19ல் 83.31 அடி, 20ல் 82.49, நேற்று 82.16 அடி என ஐந்து நாட்களாக அணை நீர்மட்டம் சராசரியாக தினமும் ஒரு அடி வீதம் நீர் மட்டடம் குறைந்து வருகிறது. பெரியகுளம் பகுதி குடிநீருக்கு வினாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீர் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ