ஜம்புலிபுத்துாரில் டிச.20ல் தொழிலாளர் சிறப்பு முகாம்
தேனி : ஆண்டிபட்டி தாலுகா ஜம்புலிபுத்துார் ஊராட்சி அலுவலகத்தில் தொழிலாளர் நலவாரியம் சார்பில் டிச.,20ல் சிறப்பு முகாம் நடக்கிறது.இதில் இணையம் சார்ந்து ஆன்லைன் உணவுகள், வீட்டு உபயோக பொருட்கள் டெலிவரி செய்யும் 'கிக்' தொழிலாளர்கள் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்திலும், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் வீட்டுப்பணியாளர்கள் நலவாரியத்திலும் உறுப்பினர்களாக பதிவு செய்யலாம்.தொழிலாளர்கள் ஆதார் , ரேஷன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டற்றுடன் பங்கேற்கலாம் என தேனி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.