உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பேச்சு

தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பேச்சு

போடி:' மாணவர்களிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்,' என மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசினார். இக் கல்லூரியில் 41வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், சொரூபன், ராதா கிருஷ்ணன், பிரபு, ஏல விவசாயிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் ஞானவேல் முன்னிலை வகித்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 416 மாணவ, மாணவிகளுக்கு மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசியதாவது: நேர்மை, துணிவுடன் கல்வி கற்று மாணவர்கள் திறம்பட செயல்பட வேண்டும். கல்வி கற்க உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்களுக்கு என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும். இன்றைய வாழ்க்கையை சமாளிக்க தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம். நாட்டின் எதிர்காலம் நோக்கி குறிக்கோளை அடைவதில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை