உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை துவக்கம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை துவக்கம்

தேனி: மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாம்கள் நாளை துவங்குகிறது. இந்த முகாம்களில் அனைத்து அரசுத் துறைகளின் சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்ட உள்ளது.நாளை (ஜூலை 15ல்) பெரியகுளம் நகராட்சியில் முதல் 4 வார்டுகளுக்கு வடகரை கோவிந்தம் மயில்தாய் திருமண மண்டபம், கம்பம் நகராட்சியில் முதல் 3 வார்டுகளுக்கு உலகத்தேவர் சந்து சமுதாயகூடம், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் முதல் 7 வார்டுகளுக்கு பி.ரெங்கநாதபுரம் 7 வது வார்டு அம்பேத்கர் தெரு சமுதாயகூடம், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, ஏத்தகோவில் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டி சமுதாயகூடம், கடமலைக்குண்டு ஊராட்சியில் பத்ரகாளியம்மன் கோயில் மண்டபத்தில் முகாம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை