உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில கூடைப்பந்து போட்டி போடி - ஆண்டிபட்டி மோதல்

மாநில கூடைப்பந்து போட்டி போடி - ஆண்டிபட்டி மோதல்

போடி: போடி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில கூடைப்பந்து போட்டி சுப்புராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது.இப் போட்டியில் போடி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, கமிஷனர் ராஜலட்சுமி துவக்கி வைத்தனர். முதல் நாள் போட்டியில் போடி ஹோப் ஸ்டார் அகாடமியும், ஆண்டிபட்டி மேஜிக் ஸ்டெப்ஸ் கூடைப்பந்தாட்ட அணியும் மோதின. இதில் 66 : 51 புள்ளி கணக்கில் போடி ஹோப்ஸ்டார் அணி வென்றது. கரூர் ஹேண்ட் லூம் சிட்டி அணியும், பெரியகுளம் திருவேங்கடம் அணியும் மோதின. இதில் 82 : 77 புள்ளிக் கணக்கில் கரூர் ஹேண்ட்லூம் சிட்டி அணி வென்றது.சென்னை வி.கே.ஜெயராம் கூடைப் பந்தாட்ட அணியும், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி அணியும் மோதின. இதில் 80 : 59 புள்ளி கணக்கில் சென்னை வி.கே. ஜெயராம் கூடைப்பந்தாட்ட அணி வென்றது.கரூர் டெக்ஸ் சிட்டி அணியும், பட்டிவீரன்பட்டி அணியும் மோதியதில் 78 : 53 புள்ளி கணக்கில் கரூர் டெக்ஸ் சிட்டி அணி வென்றது. ஏற்பாடுகளை கூடைப்பந்தாட்ட கழக தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் சந்தோஷ் குமார், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை