உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரள கழிவுகளை அனுமதிக்கும் மாநில சோதனை சாவடிகள் கலெக்டர் நடவடிக்கை தேவை

கேரள கழிவுகளை அனுமதிக்கும் மாநில சோதனை சாவடிகள் கலெக்டர் நடவடிக்கை தேவை

கம்பம்: கேரள குப்பை குவியல்கள் மூடை மூடையாக லாரிகளில் கொண்டு வந்து கம்பம் பகுதியில் கொட்டிச் செல்லும் வாகனங்கள், கம்ப மெட்டு வனத்துறை, போலீஸ் சோதனை சாவடிகளை எவ்வாறு கடந்து செல்கின்றன. இதனால் கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது. தமிழக கேரள எல்லைகளை இணைக்கும் தக்கலை, பொள்ளாச்சி, செங்கோட்டை, போடிமெட்டு, கம்பமெட்டு, குமுளி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சுற்று வட்டாரங்களில் கேரளாவில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள் கொட்டி வந்தனர். மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்பதால், கோர்ட் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர். அதன்பின் மருத்துவக் கழிவுகள் தமிழக பகுதிகளுக்குள் வந்து கொட்டுவது கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. ஆனால் தற்போது மீண்டும் கேரளாவில் சேகரமாகும் குப்பை இரவு நேரங்களில் தமிழக நகரங்களில் கொட்டிச் செல்வது ஆரம்பமாகி உள்ளது. கம்பமெட்டு மலை அடிவாரத்தில் தனியார் பட்டா காட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் 15 டன் குப்பை மூடை மூடைகளாக கொட்டப்பட்டு கிடந்தது. இந்த குப்பையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின் சோதனை சாவடிகளை 'அலர்ட்' செய்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் கம்பமெட்டு அருகில் உள்ள அணைக்கரையை சேர்ந்த ஒருவர் குப்பையுடன் வந்தவரை வனத் துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர். கம்பமெட்டில் வனத்துறை, போலீஸ் சோதனை சாவடிகள் மட்டுமே உள்ளன. இந்த சோதனை சாவடிகளை தாண்டி எவ்வாறு கம்பம் மலையடி வாரத்திற்கு குப்பை கொண்டு வரப்படுகிறது. அப்படியென்றால் சோதனை சாவடிகளில் கேரள குப்பையை தமிழக பகுதியில் கொட்ட அனுமதிக்கிறார்கள் என்று தான் தெரிகிறது. எனவே கலெக்டர் ரஞ்ஜீத்சிங் சோதனை சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட வேண்டும். எஸ்.பி., ஸ்நேகப்ரியா, மாவட்ட வன அலுவலரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ