உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில நெடுஞ்சாலைத் துறை மெத்தனம் சென்டர் மீடியனை சீரமைத்த நகராட்சி

மாநில நெடுஞ்சாலைத் துறை மெத்தனம் சென்டர் மீடியனை சீரமைத்த நகராட்சி

கூடலுார்: கூடலுாரில் சென்டர் மீடியனை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை மெத்தனம் காட்டியதால் நகராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணி நடந்தது.கூடலுார் நகர் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் நான்கு வழிச்சாலை 2022ல் அமைக்கப்பட்டது. மையப் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் முள் செடிகள் அதிகமாக முளைத்தும், ஓரத்தில் மணல் மேவியும் இருந்தது. பல இடங்களில் சென்டர் மீடியன் உடைந்து சேதமடைந்தது. எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை. இதனால் விபத்துகள் தொடர்ந்தது. மேலும் நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி முழுமையாக முடிவடையாமல் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெறாததால் விபத்து அதிகமானது.இந்நிலையில் கூடலுார் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள், விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்த மணலை அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். முள் செடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை