உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் தெரு நாய்களால் அச்சம்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி கவுன்சிலர் புகார்

போடியில் தெரு நாய்களால் அச்சம்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி கவுன்சிலர் புகார்

போடி: போடி பகுதியில் திரியும் தெரு நாய்கள் துரத்துவதால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் என 'தினமலர்' நாளிதழில் வெளிவந்த செய்தியை சுட்டி காட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேசினார். போடி நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. பொறியாளர் குணசேகர், மேலாளர் ஜலால், சுகாதார அலுவலர் மணிகண்டன், நகரமைப்பு ஆய்வாளர் சுகதேவ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: தொடர் மழையால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி உள்ளன. கொசு மருந்து தெளிக்காகததால் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜசேகர், ஜெயந்தி புகார் கூறினர். சுகாதார அலுவலர் : கொசு மருத்து தெளிக்கும் மெஷின் சில பழுதடைந்துள்ளதால் புதிதாக வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ராஜசேகர், (தி.மு.க.,): தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்கு பி.எப்., பணம் வழங்கவில்லை யார் நடவடிக்கை எடுப்பது. சுகாதார அலுவலர் : துப்புரவு பணியாளர்கள் 145 பேரில் 15 பேருக்கு வரவில்லை என புகார் கூறி உள்ளனர். நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெங்கடேசன், (தி.மு.க.,): பி.ஹைச்., ரோடு முதல் திருமலாபுரம் வரை பெரிய சாக்கடை தூர்வாராததால் சுகாதாரகேடு ஏற்பட்டு குப்பை தேங்கி கிடக்கிறது. தலைவர்: நிதி ஒதுக்கீடு செய்து தூர் வாரப்படும். மணிகண்டன், (பா.ஜ.,): போடி பஸ் ஸ்டாண்ட், தெருக்கள் முழுவதும் தெரு நாய்களின் அதிகரித்துள்ளது. நாய்களால் பயணிகளும் மக்களும் அச்சம் அடைகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை சுட்டி காட்டி பேசினார். இக் கருத்தை பல கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். சுகாதார அலுவலர்: நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை பணி நடந்து வருகிறது. கூட்டத்தில் 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை