உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜாக்டோ-ஜியோ சார்பில் பிப்.15ல் வேலைநிறுத்தம்

ஜாக்டோ-ஜியோ சார்பில் பிப்.15ல் வேலைநிறுத்தம்

தேனி: தேனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஜாக்டோ ஜியோ மாவட்ட அளவிலான வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜ்தீன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிப்.,15ல் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம், அன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மோகன், செல்லதுரை, பெத்தனகுமார், பெரியசாமி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை