உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் பேச்சு

மாணவர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் பேச்சு

தேனி, ; மாணவர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் கலா பேசினார்.கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் கலா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் மகேஷ், இணைச்செயலாளர் ராஜமன்னார், பொருளாளர் கண்ணன், கல்லுாரி செயலாளர் தாமோதரன், கல்லுாரி பொருளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.பல்கலை துணைவேந்தர் பேசுகையில், மாணவர்கள் எப்போதும் தன்நம்பிக்கையுடனும், நேர்மறை சிந்தனையுடனும் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய கல்வி முறை பாரம்பரிய கல்விமுறையாகும். கல்வியில் சிறந்தவர்கள் உள்ள போது தேசம் வலிமையானதாகும். பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்.உடல் நலத்திற்கு தீங்கு தரக்கூடிய உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். என்றார். விழாவில் இளநிலை, முதுநிலை படித்து முடித்து 479 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ