கல்வி உரிமைச் சட்டத்தில் குலுக்கல் மூலம் இன்று மாணவர்கள் தேர்வு
தேனி: மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் 554 இடங்களுக்கு குலுக்கல் முறையில் இன்று (அக்., 31) மாணவர்கள் தேர்வு நடக்க உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் எல்.கே.ஜி., முதலாம் வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நவ., 6ல் துவங்கியது. பெற்றோர்கள் அக்., 17 வரை விண்ணப்பங்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் 116 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் 1122 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படன. இந்த இட ஒதுக்கீட்டிற்காக சுமார் 2ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. 554 இடங்களுக்கு 827 விண்ணப்பங்கள் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மொத்தம் 1122 இடங்களில் சில பள்ளிகளில் குறைந்த விண்ணப்பங்கள், சரியான அளவு விண்ணப்பங்கள் என மொத்தம் 417 இடங்களுக்கு மாணவர்கள் அட்மிஷன் நேற்று முடிந்தது. மீதம் 53 பள்ளிகளில் 554 இடங்களுக்கு 827 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு இன்று நடக்கிறது. இந்த குலுக்கள் முறையில் நடைபெறும் மாணவர்கள் அட்மிஷனை கண்காணிக்கு சி.இ.ஓ., உஷா தலைமையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.