கும்பக்கரை அருவியில் அடுத்தடுத்து அறிவிப்பு
பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. பெரியகுளம் அருகே 8 கி.மீ., தூரத்தில் வனத்துறைக்கு உட்பட்டது கும்பக்கரை அருவி உள்ளது. செப்.9ல் அருவியில் சீராக தண்ணீர் வந்தது. இரவில் கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்காணல் பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் செப்.10 ல் கும்பக்கரை அருவியில் வனத்துறை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது. மறுநாள் செப்.11ல் நீர் வரத்து சீரானதால் அன்றைய தினம் குளிக்க அனுமதித்தது. இரவில் மீண்டும் மழை பெய்ததால் நேற்று செப்.12 ல் குளிக்க மீண்டும் தடை. விதித்தது பருவநிலை மாற்றம் காரணமாக மூன்று நாட்கள் மூன்று மாறுபட்ட அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.-