மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி 1.12.25
1 minutes ago
ஒரே நாளில் இரண்டு டூவீலர்கள் திருட்டு
1 minutes ago
தயார் நிலையில் தீயணைப்புத்துறை
30-Nov-2025
தேனி: தேனியில் வாகன போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட தற்காலிக சர்வீஸ் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். தேனி மதுரை ரோட்டில் மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் துவங்கும் போது, வாகனங்கள் சென்று வர அரசு ஐ.டி.ஐ., அருகே நகராட்சி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மூலம் தனியார் நிலங்கள் வழியாக தற்காலிக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அதில் அரசு ஐ.டி.ஐ., சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதிகளில் மட்டும் அரசு நிலம் என்பதால் தார்ரோடு அமைக்கப்பட்டது. மற்ற பகுதிகள் மண் ரோடாகவே உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல இடங்களில் பள்ளங்கள் அதிகரித்துள்ளன. ஓரிடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாததால் டூவீலர்களில் வருபவர்கள் தடுமாறி விழந்து காயமடைகின்றனர். சில பஸ்கள் பெரிய பள்ளத்தில் இறங்கும் போது, உதிரி பாகங்கள் பழுதடையும் நிலை ஏற்படும். இதனால் முன்பு இந்த தற்காலிக சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தி வந்த பஸ்கள் மீண்டும் மதுரை ரோடு ரயில்வே கேட் சென்று மதுரை ரோட்டிற்கு செல்கின்றன. இதனால் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட துவங்கி உள்ளது. யார் நடவடிக்கை எடுப்பது பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால், விபத்தை ஏற்படுத்தம் பள்ளத்தை சீரமைப்பது நகராட்சி நிர்வாகமா அல்லது தேசிய நெடுஞ்சாலைத் துறையினரா என்ற இழுபறி உள்ளது. ஏதாவது ஒரு அரசுத்துறையினர் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 minutes ago
1 minutes ago
30-Nov-2025