உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பூட்டிய கழிப்பறையால் அவதி

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பூட்டிய கழிப்பறையால் அவதி

கூடலுார்: பென்னிகுவிக் மணிமண்டபத்தில் கழிப்பறை பூட்டியே கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2013ல் பயன்பாட்டிற்கு வந்தது. சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறை கட்டப்பட்டது. துவக்கத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன் பின் அவ்வப்போது சேதம் அடைவதும், பின் சீரமைப்பதுமாக உள்ளது.கடந்த சில மாதங்களாக முழுமையாக சேதம் அடைந்ததால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பென்னி குவிக்கின் பிறந்தநாள் விழா மற்றும் நினைவு நாள் விழாவில் மட்டும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு திறக்கப்படும். பின்னர் தொடர்ந்து கழிப்பறை பூட்டிய கிடக்கும்.இதனால் நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை முழுமையாக சீரமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை