உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் நடந்த சுவாமி திருக்கல்யாணம்

கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் நடந்த சுவாமி திருக்கல்யாணம்

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவில் 7ம் நாளில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. யாகசாலை பூஜை, கும்ப பூஜை மற்றும் பூர்ணாகுதி நிகழ்ச்சிகளுக்கு பின் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். கோயிலில் பக்தர்களுக்கு திருமண விருந்து நடந்தது. நாளை (சனிக்கிழமை) சுவாமி திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மே 11, 12 தேதிகளில் தேரோட்டமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி