உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கால்பந்து மைதானத்தில் சிந்தடிக் கோர்ட் தேவை

 கால்பந்து மைதானத்தில் சிந்தடிக் கோர்ட் தேவை

தேனி: தேனி மாவட்ட கால்பந்து கழக மாவட்ட செயலாளர் மனோகரன் கலெக்டர் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் கால்பந்து மைதானம் அமைத்துள்ளனர். அதில் மையப் பகுதியில் மட்டும் செயற்கை புல்தரை மைதானம் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. மைதானம் முழுமையும் சிந்தடிக் கோர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மையத்தில் அமைத்து பிற பகுதியில் அமைக்காவிட்டால் மையப் பகுதியில் அமைக்கப்பட்ட டர்ப் சேதமடைந்து பயனின்றி போகும். அதனால் மைதானம் முழுவதும் 'டர்ப்' அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை