உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழ் ஆசிரியர்கள் சங்க மாவட்ட மாநாடு

தமிழ் ஆசிரியர்கள் சங்க மாவட்ட மாநாடு

மூணாறு: மூணாறில் கேரள மாநில மொழி சிறுபான்மை தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் 39ம் ஆண்டு இடுக்கி மாவட்ட மாநாடு நடந்தது.மாவட்ட தலைவர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மணி, மூணாறு உபகல்வி மாவட்ட கல்வி அதிகாரி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.நடப்பு கல்வி ஆண்டில் கலை, அறிவியல், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாணவிகள், கடந்தாண்டு தமிழ் வழி கல்வி பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் ' ஏ' கிரேடு பெற்ற 7 மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. அதேபோல் இந்தாண்டு பணி ஓய்வு பெறும் 13 தமிழாசிரியர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டனர்.இடுக்கி மாவட்ட தலைவர் புஷ்பராஜ், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.அரசு பள்ளி ஆசிரியர் பணித் தேர்வு குறிப்பிட்ட கால அளவில் நடத்த வேண்டும். தமிழ் மீடியம் பள்ளிகளில் நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தமிழ் வழி கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும், என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை