உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்சாரம் தாக்கி டீ கடை ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி டீ கடை ஊழியர் பலி

உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டியில் டீக்கடையில் பணியாற்றி வருபவர் சண்டிவீரன் 43, இவர் நேற்று காலை டீக்கடைக்கு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது, அங்கிருந்த கம்பி ஒன்றை எடுத்து வைக்க முயற்சித்துள்ளார். கம்பியின் ஒரு பகுதி அங்கிருந்த மின் மீட்டர் மீது உரசி கொண்டிருந்துள்ளது. மீட்டர் பாக்சில் இருந்து மின்சாரம் கம்பியில் பாய்ந்தது தெரியாமல் ல் கம்பியை தொட்டவுடன் சண்டிவீரன் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியானார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ