உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் மோதி டெக்னீசியன் பலி

பஸ் மோதி டெக்னீசியன் பலி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் 54, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அன்புச்செல்வி ஆண்டிபட்டி அருகே டி.சுப்பலாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இளங்கோவன் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். மனைவியை இறக்கி விட்டு மீண்டும் டி.சுப்புலாபுரம் விலக்கு அருகே சென்றுள்ளார். பின்னால் மதுரையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற தனியார் பஸ் இவர் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் தூக்கி எரியப்பட்டு இளங்கோவன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., ராமலிங்கம் விபத்தில் பலியானவரின் உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை