கோயில்களில் திருடியவர் கைது
மூணாறு: மூணாறு அருகே குண்டளை எஸ்டேட், ஈஸ்ட் டிவிஷனில் முருகன் கோயில் உண்டியல் பணமும், அங்குள்ள காளியம்மன் சிலையில் இருந்து தங்க நகைகளும் ஆக.4ல் திருடுபோனது. அச்சம்வத்தில் குண்டளை சாண்டோஸ் காலனியைச் சேர்ந்த கவுதம் 21,யை இன்ஸ்பெக்டர் பினோத்குமார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அருவிக்காடு எஸ்டேட் சென்டர் டிவிஷனில் மாரியம்மன் கோயிலில் திருடியதாகவும் தெரியவந்தது. அந்த கோயிலில் இருந்து உண்டியல் பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் ஆக.19ல் திருடுபோனது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கும் நிலையில் மூணாறு போலீசாரிடம் கவுதம் சிக்கினார் என்பது குறிப்பிடதக்கது.