உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்ட வேண்டாம் : மாணவர்களுக்கு போலீசார் ஆலோசனை

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்ட வேண்டாம் : மாணவர்களுக்கு போலீசார் ஆலோசனை

கம்பம் : போக்குவரத்து விதிகள் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கம்பம் போக்குவரத்து போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கென பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த துவங்கியுள்ளனர். கம்பம் டிராபிக் போலீசார், மாணவர்களிடையே போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகளில் தினமும் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். கம்பம் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை இன்ஸ்பெக்டர் ராபின்சன் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் நடத்தினர். மாணவர்களிடம் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராபின்சன் கூறுகையில், ' 18 வயது பூர்த்தியடையாத நிலையில் டூவீலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாணவர்கள் ஓட்டுகின்றனர். இது விதிகளுக்கு புறம்பானது. மாணவர்களிடம் போக்குவரத்து விதிகள், லைசென்ஸ் எடுக்க வேண்டிய அவசியம், சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்குரிய முறைகள், சிக்னல்களில் நின்று செல்ல வேண்டியதன் அவசியம் பற்றிய விளக்க உள்ளோம்,'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை