உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திண்டுக்கல்- கம்பம் அகல ரயில்பாதை கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு

திண்டுக்கல்- கம்பம் அகல ரயில்பாதை கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு

தேனி : திண்டுக்கல்-கம்பம் அகல ரயில்பாதை கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது. திண்டுக்கல்-கம்பம் அகல ரயில்பாதை திட்டத்திற்கு மத்திய அரசு பங்குத்தொகையினை ஒதுக்கியுள்ளது. மாநில அரசும் தனது பங்குத்தொகையினை ஒதுக்கி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட வர்த்தக காங்., தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வியக்கம் சார்பில் 500 பேர் நியமிக்கப்பட்டு, ஒரு லட்சம் பேரிடம் முகவரி, மொபைல் போன் நம்பருடன் கூடிய கையெழுத்து வாங்கப்படுகிறது. சங்கரநாராயணன் கூறியதாவது: ரயில்வே அமைச்சகம் திட்டத்திற்கு தனது பங்கு தொகையினை 2008ல் ஒதுக்கீடு செய்து தமிழக அரசுக்கும் தகவல் அனுப்பி உள்ளது. தமிழக அரசும் தனது பங்குத்தொகையினை செலுத்தினால் பணிகள் துவங்கிவிடும். நாங்கள் ஒரு லட்சம் பேரிடம் இதற்காக கையெழுத்து பெற்று முதல்வரை சந்தித்து மனு தர முடிவு செய்துள்ளோம். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே தேனி மாவட்ட மக்களின் போக்குவரத்து பிரச்னை தீரும்,'இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ