உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாய கழிவுகளை தூளாக்கும் கருவி

விவசாய கழிவுகளை தூளாக்கும் கருவி

தேனி : விவசாய கழிவுகளை தூளாக்கும் கருவி விவசாயத்துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவசாய கழிவுகளான தென்னை மட்டை, சோகை, முருங்கை கிளைகள், சோள தட்டைகள் மக்கி உரமாக நீண்ட காலமாகிறது. உரமாக மாற்றாவிட்டால் வீணாக எரித்து அளிக்க வேண்டி உள்ளது. இதனால் செலவும் கூடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக கழிவுகளை தூளாக்கும் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 85 ஆயிரம் ரூபாய் விலை உள்ள இக்கருவி டிராக்டருடன் இணைந்து செயல்படும். கூடுதல் விவரங்களுக்கு விவசாய பொறியியல் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என விவசாய உதவி செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ