உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தோட்டக்கலைத்துறையில் நூறு சதவீதம் மானியம்

தோட்டக்கலைத்துறையில் நூறு சதவீதம் மானியம்

தேனி : தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில், நூறு சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் மா, நெல்லி, கோகோ, வாழை சாகுபடிக்கு, பயனாளிகளின் உழைப்பு, கூலி தவிர மற்ற பணிகளுக்கு நூறு சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனாளிகள் தங்கள் உடல் உழைப்பினை கொடுத்தால் போதும். விதை, உரம், பூச்சிமருந்துகள் உட்பட அனைத்தும் நூறு சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைத்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்திலும் விவாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மானியம் தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர்களிடம் விண்ணப்பிக்கலாம் என, தோட்டக்கலை துணை இயக்குனர் முருகன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ