உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை

கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை

கம்பம் : கம்பம் அரசு ஆஸ்பத்திரியில், சிகிச்சையளிக்க போதிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை. இருமாநில எல்லையில் ஆஸ்பத்திரி இருப்பதால், சிகிச்சைக்காக உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் அதிகம் வருகின்றனர். விஷ முறிவு,தீவிர சிகிச்சை பிரிவு, சீமாங் சென்டர் என பல சிறப்பு பிரிவுகள் இருந்தும், அவற்றில் டாக்டர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. தினசரி வெளிநோயாளிகள் பிரிவில், ஆயிரத்து 200 பேர் வரை வருகின்றனர். போதிய டாக்டர்கள் இல்லாததால், பலர் திரும்பி செல்கின்றனர். இருக்கும் ஒன்றிரண்டு டாக்டர்களும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பணியாற்றியும், அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடிவதில்லை. கடந்த வாரம் ஆஸ்பத்திரிக்கு வந்த, தமிழ்நாடு சுகாதார துறை திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், கலெக்டர் பழனிச்சாமி, ஆகியோர் கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்ய, இணை இயக்குனருக்கு உத்தரவிட்டனர். இணை இயக்குனர் இதை தீர்க்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை