உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவிகள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்: எஸ்.பி.,

மாணவிகள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்: எஸ்.பி.,

தேனி : மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும்.போட்டிகளில் வெற்றி பெறுவதை விட பங்கேற்பதே முக்கியம், என, எஸ்.பி.,பேசினார். தேனி என்.எஸ்.கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை சார்பில், அமுதசுரபி ' தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொது செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஜவஹர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் தேவகி வரவேற்றார். பிரவீண்குமார் அபிநபு எஸ்.பி., பங்கேற்றார். அவர் பேசியதாவது:அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையால் செய்யப்பட்டவை அல்ல. விடாமுயற்சியால்தான் கிடைத்தன. இன்று, இப்பொழுதே என செயலில் இறங்கியவர்களே வரலாற்றில் இடம் பெற்றனர். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள். போட்டியில் வெற்றி பெறுவதை விட பங்கேற்பதே முக்கியம், என்றார். கல்லூரி இணை செயலாளர் மகேஸ்வரன், முதல்வர் சித்ரா உட்பட பலர் பேசினர். கவிதை,கட்டுரை உட்பட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு எஸ்.பி.,மற்றும் அவரது மனைவி பிரியங்கா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி