உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெள்ளி மலை ரோடு சேதம் வாகனம் செல்வதில் சிரமம்

வெள்ளி மலை ரோடு சேதம் வாகனம் செல்வதில் சிரமம்

வருஷநாடு : மஞ்சனூத்து செக்போஸ்ட்-வெள்ளிமலை செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சனூத்து -வெள்ளிமலை செல்லும் ரோடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறை மூலமாக ரோடு பராமரிக்கப்பட்டு வந்தது. அரசரடி, வெள்ளிமலை, இந்திராநகர், ராஜிவ் நகர், பொம்முராஜபுரம், நொச்சிஓடை போன்ற கிராமத்தினர் இந்த ரோட்டின் வழியாக தினமும் நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ரோடு மெட்டல் கற்கள் பெயர்ந்து வண்டி,வாகனங்கள் செல்ல முடியவில்லை. இங்கு வரக்கூடிய அரசு பஸ்கள் ரோட்டின் தன்மையினை அறிந்து சில நேரங்களில் வருவதில்லை. பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ரோட்டினை புதுப்பிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி