மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு
தேனி: மாவட்டத்தில் கடந்தாண்டு முதல் 8 மாதங்களில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை விட இந்தாண்டு குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு ஊரகம், நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள்,உள்ளாட்சிகளில்பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஊரக பகுதிகளுக்குஅரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில்பதிவு செய்யப்படுகின்றன. நகர் பகுதியில் நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்படுகின்றன. மாவட்டத்தில்கடந்தாண்டு ஜன., முதல் டிச., வரை ஆண் குழந்தைகள் 7785, பெண் குழந்தைகள் 7286 என மொத்தம் 15,071 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 2024 ஜன., முதல் ஆக., வரை ஆண் குழந்தைகள் 5154, பெண் குழந்தைகள் 4,801 என மொத்தம் 9955 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஆண் குழந்தைகள் 4,810, பெண் குழந்தைகள் 4,553 என மொத்தம் 9363 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் கடந்தாண்டை விடகுழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது.