போலீஸ் ஸ்டேஷனில் தீப்பற்றி எரிந்த கார்
தேனி: தேனி பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய கார் நேற்று முன்தினம் தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.இம்மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளில் தொடர்புடைய டூவீலர்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய அளவில் இடம் இல்லாததால் அருகே முல்லைப்பெரியாறு செல்லும் ரோடு, சுற்றியுள்ள இடங்களில் பறிமுதல் டூவீலர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.2021ல் திருட்டு வழக்கில் தொடர்புடைய கார் போலீஸ் ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. போலீசார் தீயை அணைத்தனர். யாரும் தீ வைத்தார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.