உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேலோ இந்தியா விழிப்புணர்வு என பெயரளவில் நடந்த மாரத்தான் போட்டி

கேலோ இந்தியா விழிப்புணர்வு என பெயரளவில் நடந்த மாரத்தான் போட்டி

தேனி : கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் தொடர்பாக நடந்த விழிப்புணர்வு மாரத்தானில் தகவல் தெரிவிக்காததால் குறைந்த அளவிலான மாணவர்களே பங்கேற்றனர். போட்டியும் யாருக்கும் தெரியாமல் கடமைக்கு நடத்தப்பட்டது.தமிழகத்தில் கேலோ இந்தியா இளைஞர்களுக்கான போட்டிகள் ஜன.,19 முதல் 31 வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.இப்போட்டிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த விளையாட்டு இளைஞர் நலத்துறை சார்பில் மாரத்தான் போட்டி அரண்மனைப்புதுாரில் நேற்று நடந்தது. மாணவர்கள், மாணவிகள் பிரிவில் நடந்த போட்டியைகலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.விளையாட்டு விடுதி மாணவர்கள், தனியார் பயிற்சி நிறுவன மாணவர்கள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கவில்லை. அரண்மனைப்புதுாரில் துவங்கிய போட்டி கொடுவிலார்பட்டி, அய்யனார்புரம் விலக்கு வழியாக சென்று, மீண்டும் அரண்மனைப்புதுாரில் நிறைவடைந்தது. தகவல் தெரியாததால் பள்ளி மாணவர்கள் பலரும் பங்கேற்க இயலவில்லை. 'விழிப்புணர்வு மாரத்தான்' என, பெயரிட்டு யாருக்கும் தெரியாமல் நடத்தி முடிக்கப்பட்டது. மாரத்தானில் பங்கேற்றவர்களின் பெயர்களும் பதிவு செய்ய இல்லை.மாரத்தான் பற்றி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் கூறுகையில், 'மாரத்தான் நடப்பது பற்றி பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஜன.,10ல் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடக்கிறது. ஜன.,16ல் கேலோ இந்தியா விளையாட்டு தொடர்பான பிரசார வாகனம் தேனி வருகிறது.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ