கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தேவாரம் : தேவாரம் அருகே அழகர்நாயக்கன் பட்டி டிரைவர் அரவிந்த் 27. இவருக்கும் டி.மீனாட்சிபுரம் கிழக்கு தெரு பிரகாஷூக்கும் 21, முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அரவிந்த்தும், அவரது மைத்துனர் கூடலுாரைச் சேர்ந்த ராஜபாண்டியும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மெயின் ரோட்டிற்கு சென்றனர். அப்போது பிரகாஷ் அரவிந்தை பிடித்துக் கொள்ள, பிரகாஷின் உறவினரான சந்துரு, அடையாளம் தெரியாத 2 நபர்கள் சேர்ந்து அரவிந்தை தகாத வார்த்தையால் பேசியதோடு கைகளால் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றனர். பாதிக்கப்பட்டவர் புகாரில் தேவாரம் போலீசார் மூவர் மீது வழக்குப் பதிந்து, பிரகாஷை கைது செய்து, மற்ற இருவரை தேடி வருகின்றனர்.