மேலும் செய்திகள்
பத்திரப்பதிவு துறை சர்வர் 9வது நாளாக முடங்கியது
08-Oct-2025
தேனி: ஆண்டிபட்டியில் நிலப்பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் உறவினரை கொலை செய்த விவசாயி குமாருக்கு 31, ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. ஆண்டிபட்டி தாலுகா கருப்பத்தேவன்பட்டி விவசாயி கழுவத்தேவர். இவரது மூத்த மனைவி பெருமாயி. இளைய மனைவி கருத்தம்மாள். பெருமாயி வழி பேரன்போஜராஜா 46. கருத்தம்மாள் வழி பேரன் குமார் 31. போஜராஜா கருப்பத்தேவன்பட்டி அருகே உள்ள நிலத்தில் சாகுபடி செய்து தேனி அரசுமருததுவக் கல்லுாரி அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். 2014ல் மூன்றரை ஏக்கர் நிலத்தை போஜராஜா, அவரது தம்பி காசிமாயனுக்கும், மூன்று ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குமார், அவரது தம்பி விஸ்வநாதனுக்கு ஊர் பெரியோர் பிரித்து கொடுத்தனர். இதில் குமார் தரப்பினர் பத்திரப்பதிவு செய்ய பணம் இல்லாததால், அவர்கள் அழைக்கும் போது செல்ல போஜராஜா தரப்பினரை பெரியோர்கள் அறிவுறுத்தினர். இதில் 1 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை குமார் தரப்பினர் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பண நெருக்கடியில் நிலம் பம்ப் செட் விற்பனை செய்யும் போதுஅதற்கு இடையூறாக போஜராஜ் இருந்தார். நிலத்தை எழுதி பத்திரப்பதிவு செய்ய போஜராஜ் ஐந்தாண்டுகளாக இழுத்தடித்ததால் ஆத்திரமடைந்த குமார்,போஜராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். க. விலக்கு போலீசார் குமாரை கொலை வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி குமாருக்குஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப் பளித்தார்.
08-Oct-2025