உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  உழவர் சந்தையில் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காத அவலம்

 உழவர் சந்தையில் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காத அவலம்

கம்பம், கம்பம் உழவர் சந்தையில் வியாபாரிகள் பயன்பாட்டிற்கென கட்டிய கழிப்பறை 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். மாவட்டத்தில் தேனி, பெரியகுளம்,போடி, சின்னமனூர், தேவாரம், கம்பம் ஆகிய ஊர்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இதில் தேனி மற்றும் கம்பம் உழவர் சந்தைகள் மட்டுமே தொடர் செயல்பாட்டில் உள்ளன. கம்பம் உழவர் சந்தையில் தினமும் 30 டன் வரை காய்கறிகள் விற்பனையாகிறது. கம்பம் உழவர் சந்தையில் 60 கடைகள் உள்ளன. விவசாயிகள் 90 பேர் தரையில் அமர்ந்தும் வியாபாரம் பார்க்கின்றனர். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சந்தையாகும். விவசாயிகள் அதிகாலை 5:00 மணிக்கே வந்து வியாபாரத்தை துவங்குகின்றனர். மதியம் 12:00 மணி வரை வியாபாரம் நடக்கும். விவசாயிகள் பயன்படுத்துவதற்கென ஆண்கள், பெண்கள் கழிப்பறைகள் 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கட்டி முடித்து 2 ஆண்டுகளை கடந்தும் இன்று வரை பயன்படுத்த அனுமதிக்காமல் பூட்டி வைத்துள்ளனர். இதனால் உழவர் சந்தைக்கு வரும் பெண் விவசாயிகள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். வேளாண் வணிக துணை இயக்குநர் இதில் இப் பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை