பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை துவக்கம்
தேனி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் நாளை(ஆக.,7) முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் தயாராகி மாவட்டந்தோறும் அனுப்பபட்டுள்ளது. இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. நாளை(ஆக.,7) முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. அரசு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுதியவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையத்தில் ஹால்டிக்கெட், உரிய சான்றுகள் அளித்து மதிபெண் சான்றிதழ்களை பெறலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.