மேலும் செய்திகள்
கழிவு இறைச்சி கூடத்திற்கு சீல்
01-Aug-2025
போடி: மேலச்சொக்கநாதபுரம் பாலாஜி நகரில் உள்ள ஆடுவதைக்கான நவீன இறைச்சி கூடம் பயன்பாடு இன்றி உள்ளதால் திறந்த வெளியில் ஆடுவதை செய்து விற்பனை செய்வதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இப் பேரூராட்சி பாலாஜி நகரில் ஆடு வதைக்கான நவீன இறைச்சிக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடு இன்றி பூட்டியே உள்ளது. ஆட்டிறைச்சி விற்பனை செய்வோர் பேரூராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறையில் அனுமதியுடன் நோய் இல்லாத ஆடு என்பதை உறுதி செய்து பின் வதை செய்ய வேண்டும். அதன்பின் பேரூராட்சி இறைச்சி மீது சீல் வைக்க வேண்டும். பாதுகாப்பான கடைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். பாலாஜி நகரில் ஆடுவதை கூடம் இருந்தும் பேரூராட்சி நிர்வாகம் செயல் படுத்தததால் வியாபாரிகள் ரோடு, சாக்கடை மீது கடைகள் அமைத்தும் திறந்த வெளியில் தெருக்களில் ஆடுவதை செய்து வருகின்றனர். இதனை மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை. இதை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. பயன்பாடு இன்றி உள்ள இறைச்சி கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Aug-2025