உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பீரோவில் இருந்த 11 பவுன் நகை திருட்டு; வாசலில் சிதறி கிடந்த 10 பவுன் நகை

பீரோவில் இருந்த 11 பவுன் நகை திருட்டு; வாசலில் சிதறி கிடந்த 10 பவுன் நகை

கடமலைக்குண்டு, : கடமலைக்குண்டு அருகே மந்திச்சுனை, மேற்கு தெருவைச் சேர்ந்த விவசாயி தர்மராஜ் 56. இவர் தனது வீட்டில் இருந்த நகைகளில் 11 பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மராஜ் தனது வீட்டு பீரோவில் 4 பெட்டிகளில் 53 பவுன் நகைகள் வைத்திருந்தார். ஜனவரி 12ல் இரவு தர்மராஜ் தனது மனைவி செல்வி, மகள் மகேஸ்வரி, பேத்தி கௌசல்யா ஆகியோர்களுடன் தூங்கினார். மறுநாள் நள்ளிரவு 2:00 மணிக்கு தர்மராஜ் சிறுநீர் கழிக்க வீட்டின் முன் வாசல் கதவை திறந்த வெளியே வந்த போது வாசலில் நகைகள் சிதறி கிடந்துள்ளது. அந்த நகைகளை எடுத்து மனைவியிடம் சரி பார்த்தார். அதில் 10பவுன் எடையிலான 4 செயின்கள் இருந்துள்ளது. பீரோவில் இருந்த மற்ற நகைகளை சரி பார்த்தில் 3 பெட்டிகளில் உள்ள 32 பவுன் நகைகள் சரியாக இருந்துள்ளது. 4வது பெட்டியில் 21 பவுன் நகைகள் இருந்த ஒரு பெட்டியை காணவில்லை. அதில் இருந்த 10 பவுன் நகைகள் தனது வீட்டின் முன்னால் கிடந்தவை என தெரிந்தது. அந்த பெட்டியில் இருந்த ரூ. 3.37 லட்சம் மதிப்பிலான 11 பவுன் நகைகளை பெட்டியுடன் நகை திருடுபோனது தெரியவந்தது. புகாரில் கடமலைக்குண்டு எஸ்.ஐ., ரங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ