மேலும் செய்திகள்
மகளிர் தினம் பேரணி
09-Mar-2025
பெரியகுளம் ' தேனியில் புத்தகத்திருவிழா நாளை (மார்ச் 23)துவங்குவதை முன்னிட்டு இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வலியுறுத்தி பெரியகுளத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேனியில் நாளை புத்தகத்திருவிழா துவங்கி மார்ச் 30 வரை நடக்க உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில்,பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு நூலகத்திலிருந்து வாசகர்கள், டிரயம்ப், ரங்ககிருஷ்ணணன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். நகராட்சி தலைவர் சுமிதா ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நூலக ஆர்வலர்கள் அன்புக்கரசன், மணிகார்த்திக், நகர் நல சங்கம் தலைவர் விஜயகுமார், பொறியாளர் ராமநாதன், நூலகர்கள் சவடமுத்து, குமரன், காளீஸ்வரி, செந்திலரசி பங்கேற்றனர். சுதந்திர வீதி, வடக்கு அக்ரஹாரம் உட்பட நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றது.
09-Mar-2025