உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவை புறக்கணிக்கும் தேனி கல்வித்துறை

ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவை புறக்கணிக்கும் தேனி கல்வித்துறை

தேனி: அரசு பொதுத்தேர்வில் நுாறுசதவீதம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாதது வருத்தமளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் அரசுபொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைக்கும் ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப் படுகிறது. இந்த விழா மாவட்டம் வாரியாகவும் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். ஆனால் தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் இந்த பாராட்டு விழாவை நடத்தாமல் புறக்கணிப்பதால் ஆசிரியர்கள் வருத்தமடைந்துள்ளனர். இதுபற்றி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், அருகில் உள்ள மாவட்டங்களில் பாராட்டு விழாக்கள் நடத்தி ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகின்றனர். தேனியில் சான்றிதழ்கள் தயார் செய்தும் விழா நடத்துவதை கடந்த ஆண்டுகளில் கல்வித்துறையினர் தவிர்த்து விட்டனர். தேர்ச்சி சதவீதம் குறைந்தால், ஏன் குறைந்தது என கேட்கும் அதிகாரிகள், நுாறுசதவீத தேர்ச்சி பெற வைத்தால் ஊக்கப்படுத்துவதில்லை. எதிர் வரும் ஆண்டுகளிலாவது ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விழாக்கள் நடத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை