உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் சுகாதார பணிக்கு போதிய பணியாளர்கள், வாகனங்கள்  இன்றி தவிப்பு

தேனியில் சுகாதார பணிக்கு போதிய பணியாளர்கள், வாகனங்கள்  இன்றி தவிப்பு

தேனி: தேனி நகராட்சியில் துாய்மை பணிகள் மேற்கொள்ள போதிய பணியாளர்கள் வாகனங்கள் இன்றி தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதனை 5 டிவிஷன்களாக பிரித்து துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிரந்தர பணியாளர்கள் சுமார் 50 பேர் உள்ளனர். இவர்களை வைத்து கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இது தவிர வீடுகளில் குப்பை சேகரித்தல், குப்பை பிரித்தல் உள்ளிட்ட பணிகள் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணியில் 140க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், தனியார் நிறுவனம் தினமும் 100 பணியாளர்களை மட்டும் ஈடுபடுத்துவால் நகர்பகுதியில் பல இடங்களில் சுகாதாரப்பணிகள் தேக்கமடைகின்றன.அதே நேரம் போதிய வாகனங்கள் இல்லாதாதல் குப்பையை நுண்ணுரம் செயலாக்க மையம், தப்புக்குண்டுவில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்வதில் சிரமம் நிலவுகிறது. நகர்பகுதியில் குப்பையை பிரித்து ஒரே வாகனத்தில் மக்கும், மக்காத குப்பையை ஏற்றி தப்புக்குண்டுவிற்கு கொண்டு சென்று அங்கு மக்காத குப்பையை கொட்டுகின்றனர். பின்னர் அங்கிருந்து மக்கும் குப்பையை நுண்ணுர செயலாக்க மையத்திற்கு கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவனம் கூடுதல் பணியாளர்கள், வாகனங்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ