உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி கிராண்ட் அரிமா சங்க துவக்க விழா

தேனி கிராண்ட் அரிமா சங்க துவக்க விழா

தேனி: தேனி முல்லை அரிமா சங்கத்தின் அறிமுகமான தேனி கிராண்ட் அரிமா சங்கத் துவக்கவிழா தேனியில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட ஆளுநர் சசிக்குமார் விழாவை துவக்கி வைத்தார். அரிமா சங்கத்தலைவர் சரவணக்குமார், செயலாளர் பிரவீன் ஜெய்குமார், பொருளாளர் கந்தகேசவன், நிர்வாகிகள் பாண்டியராஜ், செல்வம் ஆகியோர் உறுப்பினர்கள், முதல்நிலை துணை ஆளுநர்களை அறிமுகம் செய்தார்.நலத்திட்ட உதவிகளை இரண்டாம்நிலை துணை ஆளுநர் ஆறுமுகம் வழங்கினார்.ஆலோசகர்கள் ராதாகிருஷ்ணன், சுதந்திராஜன், கேபினட் இணைச்செயலாளர் பாண்டியராஜ், முன்னாள் மண்டலத்தலைவர்கள் கண்ணன், ராஜ்மோகன், அரிமா சங்க நிர்வாகிகள் கணேஷ், ஜெகதீஸ், தங்கராஜ், முத்துசெந்தில், சரவணராஜா, கண்ணன்ராஜா, ஸ்ரீதரன், நாகராஜ், அன்பழகன், சங்கரநாராயணன், அருண், வர்த்தக பிரமுகர்கள் பிரேம்சாய், பிரபு, கோடீஸ்வரன், ஷ்யாம்சுந்தர், இளஞ்செழியன், காசிமணி, சுரேஷ், மாதவன், பாண்டிச்செல்வம், சத்தியமூர்த்தி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விழாவிற்கு முன் நடந்த இலவச மருத்துவமுகாமில் டாக்டர்கள் கபிலன், கஜலட்சுமி, கார்த்திகேயன், ஆனந்தி, முகமதுதாரிக், ஜனோபர் சபானா ஆகியோர் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர். இலவசமாக சோலார் பல்புகள், போர்வைகள், உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை