உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினராக தேனி எம்.பி., நியமனம்

ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினராக தேனி எம்.பி., நியமனம்

தேனி: தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியா ரயில்வே 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மண்டலங்களில் புதிய ரயில்கள் இயக்குவது, ரயில்நிலையங்களை மேம்படுத்துவது, பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர ரயில்வே ஆலோசனைக்குழு ரயில்வே அமைச்சர் தலைமையில் அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் லோக்சபா எம்.பி.,க்கள் 23 பேர், ராஜ்யசபா எம்.பி.,கள் 8 பேர் என மொத்தம் 36 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் புதிய ரயில் இயக்குவது, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை ரயில்வே துறைக்கு வழங்குவர்.புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தமிழகத்தில் இருந்து லோக்சபா எம்.பி.,கள் தங்கதமிழ்செல்வன், வெங்கடேசன், ராஜ்யசபா எம்.பி.,கள் அன்புமணிராமதாஸ், தர்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பதவி வகிப்பர். தேனி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் இருந்து காலையில் மதுரைக்கு ரயில், தினமும் சென்னைக்கு ரயில் இயக்க வலியுறுத்தினால், ரயில்கள் இயக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ