உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி புது பஸ் ஸ்டாண்டில் 3வது பிளாட்பாரத்திற்கு பாதை ரூ. 2 கோடியில் மதிப்பீடு தயாரிப்பு

தேனி புது பஸ் ஸ்டாண்டில் 3வது பிளாட்பாரத்திற்கு பாதை ரூ. 2 கோடியில் மதிப்பீடு தயாரிப்பு

தேனி :தேனி புது பஸ் ஸ்டாண்டில் 3 வது பிளாட்பாரத்திற்கு மேற்கு நுழைவாயில் வழியாக பஸ்கள் செல்லும் வகையில் புதிய பாதை அமைக்க ரூ.2 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் 3 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் முதல் இரு பிளாட்பாரங்களில் மதுரை, போடி, மூணாறு, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி மார்கமாக செல்லும் பஸ்கள் நிற்கின்றன.இந்த பிளாட்பாரங்களுக்கு பஸ்கள் மேற்கு நுழைவாயில் வழியாக உள்ளே வருகின்றன.மூன்றாவது பிளாட்பாரத்தில் டவுன் பஸ்கள், கோவை, திருப்பூர் பஸ்கள் நிற்கின்றன. இந்த பிளாட்பாரத்திற்கு மட்டும் பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்லவும் ஒரே நுழைவாயில் பயன்படுத்தப்படுகிறது.இதனால் சில பஸ்கள் பயணிகளை நடுரோட்டில் நிறுத்தி இறக்கி விடுவதால் பயணிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் அனைத்து பஸ்களும் மேற்கு நுழைவாயில் வழியாக மட்டும் உள்ளே வரும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேனி நகராட்சி அதிகாரிகள் கூறினர்.அவர்கள் கூறியதாவது, மூணாறு பஸ்கள் நிறுத்தும் பகுதியில் பஸ் செல்வதற்கான பாதை ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பஸ் ஸ்டாண்டில் மேற்கூரைகள், கழிப்பறைகள் சீரமைப்பு, வர்ணம் பூசும் பணி, புதிய பாதையில் மின் விளக்குவசதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடி மதிப்பில் அறிக்கை தயாரித்து நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுப்பபட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ