உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரள செக்போஸ்ட்களில் விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு : மான்கொம்புகள் பறிமுதல்

கேரள செக்போஸ்ட்களில் விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு : மான்கொம்புகள் பறிமுதல்

மூணாறு : கேரளா-தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகளில் கேரளா லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை நடத்தினர். இடுக்கி மாவட்டத்தில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு, சின்னார் போன்ற பகுதிகளில் உள்ள சோதனச் சாவடிகளில் சோதனை நடந்தது.சின்னார் சோதனைச் சாவடிகளில் டி.எஸ்.பி., கிருஷ்ணன்குட்டி தலைமையில் சோதனை நடந்தது. விற்பனைவரித்துறை சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.16 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. வனத்துறை செக்போஸ்டில் இருந்த 6 மான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.குமுளியில் டி.எஸ்.பி.,ஜோசப் தலைமையில் விற்பனை வரித்துறை சோதனைச் சாவடியில் சோதனை நடந்தது. பல்வேறு வழக்குகளில் ரூ.19 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டதற்கான அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாதது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை