உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏலக்காய் விலை குறைவை தடுக்க ஸ்பைசஸ் வாரியம் தலையிட கோரிக்கை

ஏலக்காய் விலை குறைவை தடுக்க ஸ்பைசஸ் வாரியம் தலையிட கோரிக்கை

கம்பம் : ஏலக்காய் விலை குறைந்து வருவதை தடுக்க ஸ்பைசஸ் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏல விவசாயிகள் சார்பில், ஸ்பைசஸ் வாரிய சேர்மன் ஜெயதிலக்கிடம் நேரில் வலியுறுத்தினர்.இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த சீசனில் நல்ல மகசூல் கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் அழுகல் ஏற்பட்டு, மகசூல் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் விலை கிலோவிற்கு ரூ. 600 க்கும் குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கம்பம் கேரள கார்டமம் குரோயர்ஸ் யூனியன், போடி கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன், வண்டன்மேடு கார்டமம் குரோயர்ஸ் அசோசியேசன் ஆகிய மூன்று ஏல விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் குழு ஸ்பைசஸ் வாரிய சேர்மன் ஜெயதிலக்கை சந்தித்தது.ஸ்பைசஸ் வாரியத்தில் உள்ள கார்டமம் டெவலப்மெண்ட் பண்டிலிருந்து, ஆரம்பிக்கப்பட்டு, செயல்படாமல் உள்ள ஆக்ஷன் கம்பெனியை செயல்படுத்த ஸ்பைசஸ் வாரியம் முன்வர வேண்டும். ஒரு கிலோ ஏலக்காய் உற்பத்திக்கு ரூ. 600 வரை செலவாகிறது. ஆனால் விலை கிலோவிற்கு ரூ. 600 க்கு கீழ் கிடைத்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்ப்படுவார்கள். எனவே ஸ்பைசஸ் வாரியம் ஏல விவசாயிகளிடமிருந்து காய் கொள்முதல் செய்ய, செயல்படாமல் உள்ள ஆக்ஷன் கம்பெனியை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை