உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் தேனி வாலிபர்

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் தேனி வாலிபர்

தேனி : சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில், சிக்கியுள்ள தேனி மாவட்ட வாலிபரை மீட்க கோரி அவரது பெற்றோர், கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தேனி மவட்டம் தாடிச்சேரியை சேர்ந்த விவசாயி மகாராஜன் மகன் உதயராம்,27. மும்பையில் செயல்படும், 'ஆங்கிலோ ஈஸ்ட்டன் பிரைவேட் லிமிடெட்' என்ற அமெரிக்க நிறுவனத்தின், கப்பலில்,கெமிக்கல் டேங்கர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன் கப்பலில் சென்றார். நேற்று முன்தினம் காலை, ஓமன் நாட்டின் துறைமுகத்தில் கப்பலில் உதயராம் பணியில் இருந்தார். அப்போது சோமாலியா கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் சென்னை கிளையில் இருந்து, உதயராம் பெற்றோருக்கு, இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் உதயராமின் தந்தை மகாராஜன், தாய் சாந்தி மற்றும் உறவினர்கள் நேற்று மாலை தேனி கலெக்டர் பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, உதயராம் தங்களின் ஒரே மகன் என்றும், இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது நிலை குறித்து எதுவும் தெரியவில்லை. அவரை மீட்டுத்தர வேண்டும், என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர். தமிழக அரசுக்கு தெரிவித்து, இந்திய தூதரகம் மூலம் மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ